சச்சின் இல்லை... கிரிக்கெட் உலகில் தலை சிறந்தவர் அவர்தான் - எம்.எஸ். தோனி பாராட்டு

சதமடிக்காமல் தவித்த காலங்களில் தோனி மட்டுமே தமக்கு மெசேஜ் செய்து ஆதரவு கொடுத்ததாகவும் விராட் கோலி தெரிவித்திருந்தார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனியும், நட்சத்திர வீரரான விராட் கோலியும் சிறந்த நண்பர்களாக கருதப்படுகின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு தோனி தலைமையில் அறிமுகமான விராட் கோலி குறுகிய காலத்திலேயே சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அத்துடன் 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்றிருந்தும் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பின் விராட் கோலி தலைமையில் சாதாரண வீரராக தோனி விளையாடினார்.

மறுபுறம் பொறுப்பில் இல்லை என்றாலும் தோனி தான் எப்போதுமே தன்னுடைய கேப்டன் என்று விராட் கோலி பலமுறை கூறியுள்ளார். மேலும் சதமடிக்காமல் தவித்த காலங்களில் தோனி மட்டுமே தமக்கு மெசேஜ் செய்து ஆதரவு கொடுத்ததாகவும் விராட் கோலி தெரிவித்திருந்தார். அந்தளவுக்கு விராட் கோலியும் தோனியும் கிரிக்கெட்டை தாண்டிய நட்பை கொண்டுள்ளனர்.

இந்நிலையில் உலக கிரிக்கெட்டில் விராட் கோலி மிகச்சிறந்தவர் என்று தோனி பாராட்டியுள்ளார். இந்தியாவுக்காக அவருடன் இணைந்து விளையாடியது பற்றி சமீபத்திய பேட்டியில் தோனி பேசியது பின்வருமாறு:-

"இந்தியாவுக்காக நாங்கள் நீண்ட காலம் இணைந்து விளையாடிய சக வீரர்கள். உலக கிரிக்கெட் என்று வரும் போது விராட் கோலி தலை சிறந்தவர். உண்மையில் மிடில் ஓவர்களில் அவருடன் சேர்ந்து நான் நிறைய பேட்டிங் செய்துள்ளேன். அது மிகவும் ஜாலியாக இருக்கும். ஏனெனில் நாங்கள் நிறைய டபுள் மற்றும் ட்ரிபிள் ரன்களை ஓடி எடுப்போம். எனவே அது எப்போதுமே வேடிக்கையாக இருக்கும். இருப்பினும் தற்போது நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது நாங்கள் சில நேரங்கள் பல்வேறு விஷயங்களை பேசுவோம். குறிப்பாக அனைத்தும் எப்படி செல்கிறது என்பது பற்றி பேசுவோம். அப்படித்தான் எங்களுடைய உறவு இருக்கிறது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com