இந்த ஐ.பி.எல். தொடரில் கண்டெடுக்கப்பட்ட மிகச்சிறந்த வீரர் இவர்தான் - பாண்டிங் பாராட்டு


இந்த ஐ.பி.எல். தொடரில் கண்டெடுக்கப்பட்ட மிகச்சிறந்த வீரர் இவர்தான் - பாண்டிங் பாராட்டு
x

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் நிலவி வருவதால் ஐ.பி.எல். தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சண்டிகர்,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 57 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 13 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளில் பல அறிமுக வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிலும் குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி (ராஜஸ்தான் ராயல்ஸ்), ஆயுஷ் மாத்ரே (சென்னை சூப்பர் கிங்ஸ்), பிரியன்ஷ் ஆர்யா (பஞ்சாப் கிங்ஸ்), விப்ராஜ் நிகாம் (டெல்லி கேப்பிடல்ஸ்) உள்ளிட்ட சில வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் 2025 ஐ.பி.எல். தொடரில் கண்டெடுக்கப்பட்ட மிகச்சிறந்த வீரர் பிரியன்ஷ் ஆர்யாதான் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்த ஆண்டு பிரப்சிம்ரன் சிங் எங்களது அணிக்காக மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாகவே அவர் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதால் அவரது இந்த ஆட்டம் பெரியது கிடையாது. ஆனால் அணிக்குள் புதிதாக இணைந்த பிரியன்ஷ் ஆர்யா இந்தத் தொடரில் நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் ஐ.பி.எல். தொடரில் கண்டெடுக்கப்பட்ட மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். வேகப்பந்து வீச்சாளர்களாக இருந்தாலும் சரி, சுழற்பந்து வீச்சாளர்களாக இருந்தாலும் சரி இவர்களது ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது அணிக்கு மிகச்சிறப்பான தொடக்கத்தை அளிக்கிறது. அதிலும் குறிப்பாக பிரியன்ஷ் ஆர்யா பயமின்றி விளையாடும் விதத்தை பார்க்கையில் நிச்சயம் அவருக்கு பெரிய எதிர்காலம் உள்ளது" என்று கூறினார்.

1 More update

Next Story