இங்கிலாந்தின் பேஸ்பாலுக்கு உண்மையான பந்துவீச்சை காட்டியது அவர்தான் - அஸ்வின் பாராட்டு

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது.
image courtesy; twitter/@BCCI
image courtesy; twitter/@BCCI
Published on

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் ஆளுக்கு ஒன்று வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் கலக்கிய பும்ரா 9 விக்கெட்டுகளை சாய்த்த ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்தை தோற்கடிப்பதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தின் பேஸ்பாலுக்கு பும்ரா பூம்பாலை காட்டி இந்தியாவை வெற்றி பெற வைத்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். இது குறித்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு;-

"அங்கே உண்மையான மேட்ச் வின்னர் பூம்பால். பும்ரா அபாரமாக பந்து வீசினார். இங்கிலாந்தின் பேஸ்பாலுக்கு பும்ரா உண்மையான பந்துவீச்சை காட்டினார். இத்தொடரில் 14 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் நம்பர் 1 டெஸ்ட் பவுலராகவும் முன்னேறியுள்ளார். அவருக்கும் அவருடைய இந்த இமாலய சாதனைக்கும் நான் மிகப்பெரிய ரசிகன்.

அதேபோல சுப்மன் கில் நல்ல திறமையை கொண்டுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இரண்டாவது இன்னிங்ஸில் அடித்த சதம் பேட்ஸ்மேனாக தம்மிடம் உள்ள திறமையை அவர் நியாயப்படுத்தினார். வெற்றி கேள்விக்குறியாக இருந்த சமயத்தில் நாங்கள் 4-வது நாளில் விளையாட வந்தோம். ஆனால் எங்களுடைய எண்ண அலைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை 1- 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய உதவியது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com