

அகமதாபாத்,
ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, பெங்களூரு பந்துவீச்சுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுக்ளை இழந்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெறும் 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் 56 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி, ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 60 ரன்களை எட்டியபோது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சற்றே அழுத்தத்துக்குள்ளானது.
அந்த நேரத்தில் விராட் கோலி தனது அனுபவத்தை வெளிப்படுத்தி பொறுப்பான இன்னிங்ஸ் ஆடினார். அணியை வெற்றிப் பாதையில் கொண்டு சென்று கோப்பியை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் ஒருமுறையும் கோப்பையை வெல்லாத அணியாக இருந்த ஆர்சிபி, கடந்த ஆண்டு முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது 2026 சீசனிலும் கோப்பையை கைப்பற்றி, தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் சாம்பியன் பட்டம் வென்ற அணியாக புதிய வரலாறு படைத்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பையை வென்ற சாதனையை முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டுமே நிகழ்த்தியிருந்தன. தற்போது அந்த எலைட் பட்டியலில் ஆர்சிபியும் இணைந்துள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் மும்பைக்கு பிறகு, தொடர்ந்து இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வென்ற மூன்றாவது அணியாக பெங்களூரு திகழ்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை கோப்பை வென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை கோப்பை வென்றுள்ளது.