ஹிட் விக்கெட்டும், சாய் சுதர்சனும் - தொடரும் சோகம்

குவாலிபையர் 2 போட்டியில் சாய் சுதர்சன் அவுட்டான விதம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
ஹிட் விக்கெட்டும், சாய் சுதர்சனும் - தொடரும் சோகம்
Published on

முல்லன்பூர்,

முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026 குவாலிபையர் 2 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் சாய் சுதர்சன் ஹிட் விக்கெட் ஆகி ரசிகர்களை அதிர்சியில் உறைய வைத்தார்.

ராஜஸ்தான் அதிரடி

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக விளையாடி வெறும் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது.

கில் - சாய் சுதர்சன் கூட்டணி

பின்னர் 215 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் சதம் விளாசி வெற்றி பாதையை அமைத்தார். அவருக்கு துணையாக சாய் சுதர்சன் 58 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் குஜராத் அணி இலக்கை எட்டியதுடன், அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. அங்கு நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

தொடரும் துரதிர்ஷ்டம்

இந்த போட்டியில் சாய் சுதர்சன் அவுட்டான விதம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. பவுண்டரி அடித்தநிலையில், கையில் இருந்த பேட் நழுவி பின்னால் இருந்த ஸ்டம்ப் மீது விழுந்தது. இதனால் அவர் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.

முன்னதாக பெங்களூரு அணிக்கு எதிரான குவாலிபையர் 1 போட்டியிலும் சாய் சுதர்சன் இதேபோன்ற முறையில்தான் அவுட்டாகியிருந்தார். அப்போதும் பவுண்டரி அடித்த பிறகு பேட் கை நழுவி ஸ்டம்ப் மீது பட்டதால் ஹிட் விக்கெட் ஆனார்.

தொடர்ச்சியாக இரண்டு பிளேஆப் போட்டிகளில் சாய் சுதர்சன் ஹிட் விக்கெட் ஆகி இருப்பது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com