ஹாங்காங் சிக்சஸ்: இந்திய அணியின் புதிய கேப்டன் க்ருணால் பாண்டியா... புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக யார்?

ஹாங்காங் சிக்சஸ் தொடர் அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை நடைபெறவுள்ளது.
க்ருணால் பாண்டியா
Published on: 

ஹாங்காங்,

ஹாங்காங் சிக்சஸ் 2026 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக க்ருணால் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

புவனேஷ்வருக்குப் பதிலாக குல்வந்த் கெஜ்ரோலியா

ஹாங்காங் சிக்சஸ் தொடர் அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை நடைபெறவுள்ளது. இதில் புவனேஷ்வர் குமார் தலைமையில் 7 பேர் கொண்ட இந்திய அணி முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளநிலையில், தற்போது புதிய கேப்டனாக க்ருணால் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இத்தொடரில் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கெஜ்ரோலியா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஹாங்காங் சிக்சஸ் 2026: இந்திய அணி

க்ருணால் பாண்டியா – கேப்டன்

சஷாங் சிங்

ராகுல் திவேதியா

நிதிஷ் ராணா

ராகுல் திரிபாதி

டி. நடராஜன்

குல்வந்த் கெஜ்ரோலியா

அக்டோபர் 30-ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடரில், க்ருணால் பாண்டியா தலைமையிலான இந்திய அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com