

லண்டன்,
மகளிர் டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து, குரூப் 'ஏ' பிரிவில் அரையிறுதிக்கான போட்டி சூடுபிடித்துள்ளது.
மீதமுள்ள போட்டிகள்: வங்காளதேசம், ஆஸ்திரேலியா
புள்ளிகள்: 4
நெட் ரன் ரேட்: +2.511
தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்த போதிலும், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக பெற்ற அபார வெற்றிகள் இந்தியாவின் ரன் ரேட்டை வலுவாக வைத்துள்ளன. மீதமுள்ள இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், இந்தியா அரையிறுதிக்குள் எளிதாக நுழையலாம். ஆனால் ஒரு தோல்வி கூட வாய்ப்பை கடினமாக்கும்.
மீதமுள்ள போட்டிகள்: நெதர்லாந்து, வங்காளதேசம்
புள்ளிகள்: 4
நெட் ரன் ரேட்: -0.546
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால் தென் ஆப்பிரிக்காவின் ரன் ரேட் மைனஸில் உள்ளது. இருப்பினும் இந்தியாவை வீழ்த்தியதால் அதன் அரையிறுதி வாய்ப்பு உயிர்ப்புடன் உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மீதமுள்ள போட்டிகள்: இந்தியா, தென் ஆப்பிரிக்கா
புள்ளிகள்: 4
நெட் ரன் ரேட்: -0.641
நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை தொடங்கிய வங்காளதேசம், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததால் ரன் ரேட்டில் பின்னடைவை சந்தித்தது. பாகிஸ்தானை வென்றதன் மூலம் அரையிறுதி ரேஸில் நீடித்தாலும், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்த போட்டிகளில் வெற்றியுடன் சேர்த்து ரன் ரேட்டையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா, +4.391 என்ற அபார நெட் ரன் ரேட்டுடன் குரூப் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது. அந்த அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது என்றே சொல்லலாம்.
தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
குரூப் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக அரையிறுதிக்கு முன்னேறப்போகும் அணியை தீர்மானிக்க, இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே கடும் ரன் ரேட் யுத்தம் நடைபெற உள்ளது.