

மும்பை,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
இந்த சீசனில் முதல் வெற்றியை பெற ஐதராபாத் அணியும் வெற்றி பாதையை தொடர லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.