

ஐதராபாத்,
10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது.ஐதராபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சந்திக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.பின்னர் டிராவிஸ் ஹெட் 7 ரன்னில் அவுட்டானார்.அடுத்து இறங்கிய கேப்டன் இஷான் கிஷன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து லிவிங்ஸ்டன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நிதிஸ் ரெடி , கிளாசான் இருவரும் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தனர்.
தொடர்ந்து லிவிங்ஸ்டன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நிதிஸ் ரெடி , கிளாசான் இருவரும் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தனர்.
இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் ஷமி , அவேஸ் கான் , பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.