குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பீல்டிங் தேர்வு...!

ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் குஜராத்-ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

அகமதாபாத்,

ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இதுவரை 61 லீக் ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில் இன்னும் எந்த அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. டெல்லி அணி மட்டும் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது.

இந்நிலையில், தொடரில் இன்று நடைபெறும் 62வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறும் முனைப்பில் குஜராத் அணியும், இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும் என்ற நிலையில் ஐதராபாத் அணியும் மோத உள்ளதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com