நான் இன்னும் பார்மில்தான் இருக்கிறேன் – முகமது ஷமி

எத்தனை ஓவர்கள் வீச வேண்டும் என்பதை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் முடிவு செய்ய முடியாது.


நான் இன்னும் பார்மில்தான் இருக்கிறேன் – முகமது ஷமி
Published on: 

புதுடெல்லி,

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். தனது உடற்தகுதி குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும், உள்ளூர் கிரிக்கெட்டில் குறைந்த ஓவர்கள் மட்டுமே வீசுவதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

36 வயதான முகமது ஷமி, இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இருப்பினும், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, அவரது உடற்தகுதி மற்றும் பந்துவீச்சுத் திறன் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதற்குப் பதிலளித்த ஷமி, *“நான் இன்னும் எனது உச்சகட்ட ஃபார்மில்தான் இருக்கிறேன். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை . ஒரு வேகப்பந்து வீச்சாளர் எத்தனை ஓவர்கள் வீச வேண்டும் என்பதை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் முடிவு செய்ய முடியாது.

ஆடுகளத்தின் தன்மை, பேட்ஸ்மேன்களின் ஆட்டம் மற்றும் அணியின் தேவையைப் பொறுத்தே பந்துவீச்சாளர்களுக்கான ஓவர்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்றும், இது கேப்டனின் முடிவைப் பொறுத்தது.

2026-27 ரஞ்சி டிராபி தொடரின் தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக வங்காள அணிக்காக விளையாடிய ஷமி, சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

இந்தப் போட்டியில் 17.3 ஓவர்கள் வீசி, 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் 9 மெய்டன் ஓவர்களும் அடங்கும்.

இருப்பினும், சர்வீசஸ் அணிக்கு எதிரான வங்காள அணியின் அடுத்த ரஞ்சி போட்டியில் அவர் விளையாடவில்லை. முந்தைய போட்டியில் அதிக ஓவர்கள் வீசியதால் ஓய்வு கேட்டதாக வங்காள அணியின் பயிற்சியாளர் லட்சுமி ரத்தன் சுக்லா விளக்கமளித்திருந்தார். ஷமியின் உடற்தகுதி குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com