

சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர்- கேன்டிஸ் தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களது 2-வது மகள் 3 வயதான இன்டி ரே தனது வீட்டில் கிரிக்கெட் மட்டையுடன் பேட்டிங் செய்வது போன்ற ஒரு வீடியோ காட்சியை கேன்டிஸ் இன்ட்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோவில், வார்னர் பந்தை எறிகிறார். பேட்டிங் செய்யும் இன்டி ரே, ஒவ்வொரு முறையும் நான் விராட் கோலி என்று சொல்லியபடி பந்தை அடித்து விரட்டுகிறாள். இது குறித்து கேன்டிஸ் கூறுகையில், எனது குட்டி மகள் இந்தியாவில் அதிக நேரத்தை செலவிட்டு இருக்கிறாள். அதன் தாக்கமோ என்னவோ விராட் கோலி போன்று ஆக விரும்புகிறாள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.