பும்ராவை பார்த்து எனக்கு நிறைய நம்பிக்கை கிடைத்தது - ஆஸ்திரேலிய வீரர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 11ம் தேதி லண்டனில் தொடங்குகிறது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

லண்டன்,

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை லண்டனில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியில் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் நீண்ட நாளுக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். இந்த நிலையில், பும்ராவை தாம் ஒரு ரோல் மாடலாக எடுத்து கொண்டு செயல்பட போவதாக அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு கம்பேக் கொடுத்த அவர், உலக கிரிக்கெட்டில் சில அற்புதமான சாதனைகளைப் புரிந்தார். பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் சிறந்த வீரர் விருதை வென்றார். இந்நிலையில், பும்ரா குறித்தும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்தும் கேமரூன் க்ரீன் சில கருத்துகளை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, அது மிகவும் (பும்ரா காயத்திலிருந்து மீண்டது) சிறப்பானது. இது உங்களுக்கு நிறைய நம்பிக்கையை அளிக்கிறது. நான் அவருடன் மும்பை அணியில் நான் விளையாடவில்லை. ஆனால், அங்கு அவருடன் சிறிது நேரம் செலவிட்டேன். அவரைப் பார்க்கும்போது, அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார் என்பதைப் பார்த்து, எனக்கு நிறைய நம்பிக்கை கிடைத்தது.

காயத்தில் இருந்து ஒரு நம்பிக்கை ஒளியை தேட முயற்சித்தேன். நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறோம், வீட்டில் நேரம் செலவிடுவது கடினம். வீட்டில் சிறிது நேரம் செலவிடுவது புத்துணர்ச்சி பெறவும், நண்பர்களுடன் மீண்டும் இணைவதற்கும், குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கும், உடற்பயிற்சி கூடத்தில் நேரம் செலவிடுவதற்கும், என் உடலை சரிசெய்வதற்கும் கிடைத்த வாய்ப்பு.

என் பேட்டிங் மற்றும் பந்துவீச்சைப் பற்றி நன்றாக சிந்திக்க முடிந்தது. அதை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று யோசித்தேன். நான் காயமடைந்தபோது, நிச்சயமாக கலவையான உணர்வுகள் இருந்தன. டெஸ்ட் கிரிக்கெட்டை தவறவிடுவது மிகவும் வேதனையாக இருந்தது.

தோழர்கள் (சக வீரர்கள்) விளையாடுவதைப் பார்ப்பது சில நேரங்களில் கடினமாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில், 5-6 மாதங்கள் ஓய்வு பெறப் போகிறேன் என்பது எனக்கு தெரியும், இது எனக்கு மிகவும் தேவையாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com