

லண்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்ட நிலையில், தொடர்ந்து நடைபெற்ற 2வது, 3வது டி20 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக விளையாடினார். இதற்கு சிலர் ஆதரவு கொடுத்தாலும் பலர் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல சஞ்சு சாம்சன் முக்கிய பங்காற்றியிருந்தார். தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவர் 'தொடர் நாயகன்' (Player of the Tournament) விருதையும் வென்றிருந்தார்.
உலகக் கோப்பைக்கு பிறகு அவர் விளையாடிய மூன்று இன்னிங்ஸ்களில் 5, 0 மற்றும் 1 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், அந்த காரணத்திற்காகவே அணியில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியது.
இது தொடர்பாக இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியதாவது,
சஞ்சு சாம்சனுக்கு கொடுக்க வேண்டிய விளக்கத்தை நான் கொடுத்துவிட்டேன். அது முற்றிலும் வீரர் - தலைமைப் பயிற்சியாளர் இடையேயான உரையாடல், நாங்கள் என்ன பேசினோம் என்பது ஒருபோதும் வெளியே வராது.
இந்திய அணிக்காக பல அசாத்தியமான காரியங்களை சஞ்சு சாம்சன் செய்துள்ளார். வீரர்கள் தேர்வின்போது FORM-ஐயும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நடப்பு தொடரிலேயே அவர் கம்பேக் கொடுக்கலாம். என தெரிவித்துள்ளார்.