அவர் விளையாடுவதை நான் மிகவும் விரும்பி பார்த்திருக்கிறேன்: அபிஷேக் சர்மா

ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்தது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
அவர் விளையாடுவதை நான் மிகவும் விரும்பி பார்த்திருக்கிறேன்: அபிஷேக் சர்மா
Published on

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் அதிரடி சதம் விளாசிய இந்திய வீரர் அபிஷேக் சர்மா, ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்தது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிவேக சதம் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை அவர் முறியடித்தார்.அபிஷேக் சர்மா வெறும் 30 பந்துகளில் சதம் விளாசி புதிய சாதனை படைத்தார்.

சாதனையை முறியடித்தது குறித்து அபிஷேக் சர்மா கூறுகையில்,

ரோகித்டி20 கிரிக்கெட்டில் விளையாடிய விதம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. வீட்டில் இருந்தபோது அவர் விளையாடுவதை நான் மிகவும் விரும்பி ரசித்து பார்த்திருக்கிறேன். அந்த சாதனையை முறியடித்தது இப்போதைக்கு எனது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com