

நியூசண்டிகார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் நியூசண்டிகாரில் நேற்று பகல்-இரவாக நடந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 129 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து 352 ரன் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி
48.2 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. 21-வது சதம் அடித்த ஷாய் ஹோப் 162 ரன்னுடனும் (143 பந்து, 17 பவுண்டரி, 3 சிக்சர்), குட கோஷ் மோட்டி 19 ரன்னுடனும் களத்தில் இருந்தார். முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்த இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
வெற்றி தொடர்பாக பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் இந்திய முன்னாள் கேப்டன் தோனியுடன் உரையாடியது குறித்து பேசினார். இது தொடர்பாக ஷாய் ஹோப் கூறியதாவது,
மிகச் சிறந்த வீரரான தோனியுடன் நான் ஒரு நல்ல உரையாடல் நடத்தினேன். ‘நீ நினைப்பதைவிட உன்னிடம் எப்போதும் அதிக நேரம் இருக்கும்’ என்று அவர் என்னிடம் கூறினார். அதனால், சேஸை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு கட்டமாகவும் அணுக முயற்சி செய்தோம். என தெரிவித்துள்ளார்.