"நான் டெஸ்ட் பேட்ஸ்மேனாக முடியுமா? நீங்கள் கேலி செய்கிறீர்கள்"- சேவாக்கிடம் கூறிய வார்னர்

வார்னர் உடன் நிகழ்ந்த சுவாரசிய உரையாடல் குறித்து விரேந்தர் சேவாக் பேசியுள்ளார்.
Image Courtesy : AFP
Image Courtesy : AFP
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்தர் சேவாக். இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்தார், அப்போது டெல்லி அணியில் தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் உச்ச நட்சத்திரம் டேவிட் வார்னர் இடம் பெற்று இருந்தார்.

அப்போது வார்னரிடம் நடந்த உரையாடல் குறித்து தற்போது பேசிய சேவாக் கூறுகையில், " வார்னர் முதலில் டெல்லிக்கு வந்தபோது (ஐபிஎல் 2009 இல்) அவர் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியதில்லை. அவர் முதல்தர கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன்.

நான் அவரிடம், 'நீங்கள் சிறந்த டி20 வீரராக மட்டுமல்லாமல் சிறந்த டெஸ்ட் வீரராகவும் இருக்க முடியும்' என்று கூறினேன். அவர் என்னைப் பார்த்து சிரித்துவிட்டு, 'நீங்கள் கேலி செய்கிறீர்கள், என்று பதிலளித்தார்,

அதற்கு நான், டி20களில் உங்களுக்கு ஆறு ஓவர் பவர்பிளே மட்டுமே கிடைக்கும். ஆனால் டெஸ்டில், நீங்கள் ஒரு நாள் முழுவதும் பவர்பிளே போல் ஆட முடியும் என்று நான் அவரிடம் விளக்கினேன்.

நீங்கள் விளையாட்டை விளையாடும் விதத்தில், நீங்கள் நிச்சயமாக நீண்ட வடிவத்தில் வெற்றி பெறுவீர்கள். இப்போது அவரைப் பாருங்கள். அவர் ஒரு சிறந்த டெஸ்ட் வீரராக இருக்கிறார் என்று சேவாக் கூறினார்.

வார்னர் 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகமானதில் இருந்து 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், 24 சதங்களுடன் 7,753 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com