"நானும் 3 முறை 90-களில் அவுட் ஆனேன்" - தன் கதையை சொல்லி ரோஹித்துக்காக வருந்திய கவாஸ்கர்

ரோஹித் சர்மா 92 ரன்களில் ஆட்டமிழந்தது குறித்து சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா
Published on: 

புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 92 ரன்களில் ஆட்டமிழந்தார். சதத்தை நெருங்கிய நிலையில் அவர் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்த நிலையில், ரோஹித் சர்மா 92 ரன்களில் ஆட்டமிழந்தது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

“92 ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றம்”

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

“ரோஹித் 92 ரன்களில் ஆட்டமிழந்தது எனக்கு ஏமாற்றமளித்தது. 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்.

அவர் கிரிக்கெட்டுக்கு விடைபெறும் நேரத்தில், அவரது வயதை விட அதிக எண்ணிக்கையில் ஒருநாள் சதங்கள் இருக்க வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன்.

3-வது போட்டியில் அவர் சதம் அடித்திருந்தால், தனது 36-வது சதத்தை பதிவு செய்வதன் மூலம் அந்த சாதனையை நோக்கி மேலும் நெருக்கமாக சென்றிருப்பார்.”

என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ஒரு வீரர் ஓய்வு பெறும்போது, அவரது வயதை விட சதங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது சிறப்பான விஷயம் என்று கூறினார்.

3 முறை 90-களில் ஆட்டமிழந்தேன்

“ எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி ஆண்டில், எனது வயதிற்கு இணையான எண்ணிக்கையில் டெஸ்ட் சதங்களை அடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் 3 முறை 90-களில் ஆட்டமிழந்தேன்.

அந்த சதங்களை அடித்திருந்தால், நான் ஓய்வு பெற்ற 38 வயதிற்கு இணையான எண்ணிக்கையில் சதங்களை பெற்றிருப்பேன்” என்றும் கவாஸ்கர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com