ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு நிறைய பங்களிப்பு அளிக்க விரும்புகிறேன்: வைபவ் சூர்யவன்ஷி

வைபவ் சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு நிறைய பங்களிப்பு அளிக்க விரும்புகிறேன்: வைபவ் சூர்யவன்ஷி
Published on

புதுடெல்லி,

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய விருது விழாவில் கலந்துகொண்ட அவரிடம் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே சில கேள்விகளைகேட்டார். 'நான் உங்களிடம் 3 விஷயங்களை சொல்வேன். அதில் ஒன்றைநீங்கள் தேர்வு செய்ய வேண்டும். ஒரே ஓவரில் 6 சிக்சர் ,

கிறிஸ் கெய்ல் ஐ.பி.எல்.-ல் குவித்த தனிநபர் அதிகபட்சம் 175 ரன் சாதனை அல்லது ஐ.பி.எல்.-ல் அதிவேக சதம்' இவற்றில்எதை தேர்வு செய்வீர்கள் என்று கேட்டார். அதற்கு சூர்யவன்ஷி, ஐ.பி.எல்.-ல் கெய்லின் 175 ரன் சாதனையை முறியடிக்க விரும்புகிறேன் என்று பதில் அளித்தார்.

மற்றொரு கேள்விக்கு, 'இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்வதே எனது இலக்கு. அணியின் வெற்றிக்கு நிறைய பங்களிப்பு அளிக்க விரும்புகிறேன்' என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com