அணிக்கு இன்னும் அதிகமாக பங்களிக்க நினைக்கிறேன் - பிரியன்ஷ் ஆர்யா

முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.
Image Courtesy: @IPL 
Image Courtesy: @IPL 
Published on

முல்லன்பூர்,

ஐ.பி.எல் தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிரடியாக ஆடிய பிரியன்ஷ் ஆர்யா 43 பந்தில் 103 ரன்கள் எடுத்தார்.

சென்னை தரப்பில் கலீல் அகமது, அஸ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 220 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக டெவான் கான்வே 69 ரன்கள் எடுத்தார்.

இந்தப்போட்டியின் ஆட்டநாயகன் விருது பிரியன்ஷ் ஆர்யாவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, உலகிற்கு வெளியே இருப்பது போல் உணர்கிறேன். மிகவும் மகிழ்ச்சி. அதே சமயம் இன்னும் என்னுடைய அணிக்காக வெற்றியில் அதிகம் பங்காற்ற விரும்புகிறேன். இது தான் என்னுடைய பேட்டிங் செய்யும் வழியாகும்.

அதிரடியாக பேட்டிங் செய்யும் நோக்கத்துடன் விளையாடுமாறு ஸ்ரேயாஸ் சொன்னார். அவருடைய ஆதரவால் ஒருவேளை நான் அவுட்டானாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதன் காரணமாக எனது மனதில் இருப்பதற்கு தகுந்தார் போல் விளையாட விரும்பினேன். அதே சமயம் சூழ்நிலைக்கு தகுந்தார் போலும் விளையாட விரும்பினேன். நேஹல் வதேரா வந்த போது சிங்கிள், டபுள் ரன்களை எடுப்பது பற்றி சிந்தித்தேன்.

ஆனால் உனது உள்ளுணர்வுகளைப் பின்பற்றி தொடர்ந்து இதே வழியில் விளையாடு என்று அவர் என்னிடம் சொன்னார். அனைத்து பவுலர்களும் நன்றாக பவுலிங் செய்தனர். அதனால் யார் வேண்டுமானாலும் எனக்கு பிரச்சனையைக் கொடுக்கலாம் என்று நினைத்தேன். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com