டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்: சூர்யவன்ஷி

அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்:  சூர்யவன்ஷி
Published on

சென்னை,

2026 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட் டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் அசத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்தார். பீகாரை சேர்ந்த 15 வயது சூர்யவன்ஷி 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதம் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார். இதில் 63 பவுண் டரியும், 72 சிக்சரும் அடங்கும்.

இந்த நிலையில் அடுத்தக்கட்ட இலக்கு குறித்து சூர்யவன்ஷி டி.வி. சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

சிவப்புநிற பந்தில் எனது லட்சியம் குறித்து கேட்கிறீர்கள். நான் சிவப்பு பந்துகளில் நிறைய பயிற்சி மேற்கொண்டுள்ளேன். இருப்பினும் நான் அந்த வடிவத்தில் (ரஞ்சி கிரிக்கெட்) விளையாடியதை அதிகம் பேர் பார்த்ததில்லை. வருங்காலத்தில் அவர்கள் அதை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். எனது ஆட்டத்தை பார்க்கும் அனைவரும். நான் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடவே முயற்சிக்கிறேன் என நினைக்கிறார்கள். இது 20 ஓவர் கிரிக்கெட். இதில் நான் ஆக்ரோஷமாக ஆடுவதற்கு பயிற்சியாளர்கள் முழு சுதந்திரம் அளித்துள்ளனர். ஆனால் தேவையில்லாத பந்துகளை அடிக்க முயற்சிப்பதில்லை.

நிச்சயமாக, நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறேன். கிரிக்கெட்டின் நீண்ட வடிவத்துக்கு ஏற்றவாறு என்னை தயார்படுத்திக் கொள்ளும்படி முதல் நாளில் இருந்தே எனது தந்தை கற்றுக்கொடுத்துள்ளார். டெஸ்ட் போட்டி தான் கிரிக்கெட்டின் முழுமையான வடிவம் என்று அவர் எப்போதும் என்னிடம் சொல்வார். இதுவரை அதற்கான வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு சூர்யவன்ஷி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com