2028 டி20 உலக கோப்பையிலும் விளையாடுவேன்: கிளென் மேக்ஸ்வெல் நம்பிக்கை

வருங்காலம் பற்றி எந்தவொரு முடிவையும் நான் எடுக்கவில்லை என மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
2028 டி20 உலக கோப்பையிலும் விளையாடுவேன்:  கிளென் மேக்ஸ்வெல் நம்பிக்கை
Published on

மெல்போர்ன்

ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் நடப்பு ஆண்டுக்கான டி20 உலக கோப்பையில் சரிவர ஜொலிக்காத நிலையில், அந்த அணியும் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளது. இந்நிலையில், வருங்காலத்தில் அவர் விளையாடுவது பற்றி விவாதங்கள் எழுந்தன. 2028 டி20 உலக கோப்பை தொடரில் அவர் விளையாடுவாரா? என பலரிடமும் சந்தேகம் காணப்பட்டது.

எனினும், தொடர்ந்து விளையாடுவது என்ற உறுதியான நிலைப்பாட்டில் மேக்ஸ்வெல் இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, அடுத்த 12 மாதங்களில் குறைவான அளவிலேயே டி20 போட்டிகள் உள்ளன. அதனால், வருங்காலம் பற்றி எந்தவொரு முடிவையும் நான் எடுக்கவில்லை.

Also Read
ரூ.42.94 கோடி செலவில் கட்டப்பட்ட 14 விளையாட்டு துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
2028 டி20 உலக கோப்பையிலும் விளையாடுவேன்:  கிளென் மேக்ஸ்வெல் நம்பிக்கை

இதேபோன்று, தற்போது எந்த முடிவையும் அறிவிக்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. தொடர்ந்து விளையாடுவது பற்றி முடிவு செய்வதற்கு முன்பு, என்னுடைய உடல்தகுதி மற்றும் விளையாட்டு திறன் எப்படி உள்ளது என நான் தன்னாய்வு செய்ய வேண்டும். வருங்காலத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது பற்றியும் யோசிக்க வேண்டும் என கூறினார்.

37 வயதுடைய மேக்ஸ்வெல் 2028 டி20 உலக கோப்பை தொடரின்போது 40 வயதில் இருப்பார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளும் வரவுள்ளன. அந்த போட்டிகளில் விளையாட நான் தகுதியுடனும், அதிரடியாக விளையாடும் திறமையுடனும் இருக்கிறேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com