ஐ.சி.சி வருடாந்திர தரவரிசை பட்டியல் வெளியீடு; ஒருநாள், டி20 தரவரிசையில் இந்தியா முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வருடாந்திர தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வருடாந்திர தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசையில் மே 2024 முதல் விளையாடிய அனைத்து போட்டிகளும் 100 சதவீதமாகவும், முந்தைய இரண்டு ஆண்டுகளின் போட்டிகளில் 50 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 வடிவில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில் டெஸ்ட் தரவரிசையில் 4-வது இடத்துக்கு சரிந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.ஒருநாள் தரவரிசையில் இந்தியா (124 புள்ளி) முதல் இடத்தில் உள்ளது. 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்த இந்திய அணி, ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றதன் மூலம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்த பட்டியலில் 2வது இடத்தில் நியூசிலாந்து (109 புள்ளி), 3வது இடத்தில் ஆஸ்திரேலியா (109 புள்ளி) அணிகள் உள்ளன. இலங்கை (104), பாகிஸ்தான் (104), தென் ஆப்பிரிக்கா (96), ஆப்கானிஸ்தான் (91), இங்கிலாந்து (84), வெஸ்ட் இண்டீஸ் (83), வங்காளதேசம் (76) ஆகிய அணிகள் முறையே 4 முதல் 10-வது இடங்களில் உள்ளன.

அதேபோல், டி 20 கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் நடப்பு உலக சாம்பியனான இந்திய அணி (271 புள்ளி) முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா (262), இங்கிலாந்து (254), நியூசிலாந்து 249), வெஸ்ட் இண்டீஸ் (246), தென் ஆப்பிரிக்கா (245), இலங்கை (235), பாகிஸ்தான் (228), வங்காளதேசம் (225), ஆப்கானிஸ்தான் (223) அணிகள் முறையே 2 முதல் 10-வது இடங்களில் உள்ளன.

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனாக உள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து (113), தென் ஆப்பிரிக்கா (111), இந்தியா (105), நியூசிலாந்து (95), இலங்கை (87), பாகிஸ்தான் (78), வெஸ்ட் இண்டீஸ் (73), வங்கதேசம் (62), அயர்லாந்து (30) ஆகிய அணிகள் முறையே 2 முதல் 10-வது இடங்களில் உள்ளன. ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com