ஐசிசி விருது 2023; சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஒரே ஒரு இந்தியர்....!

2023ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. அதில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

அதன்படி அதில் நம்பர் 1 டெஸ்ட் பந்து வீச்சாளரான இந்திய அணியை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலிய வீரர்களான டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா மற்றும் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com