2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. #2028Olympics #ICC
2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை
Published on

கொல்கத்தா,

லாஸ் ஏஞ்செல்ஸில் 2028 -ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற எங்களுடைய நகர்வு சிறப்பாக சென்றால் லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி டேவ் ரிச்சார்ட்சன் கூறிஉள்ளார்.

கொல்வத்தாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 5 நாள் நிர்வாக ரீதியிலான கூட்டம் நடந்தது. இன்று கடைசி நாளில் கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்ப்பது மற்றும் கிரிக்கெட் போட்டியை உலகமயமாக்குதல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் வாரியம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதற்கான பணியில் துரிதமாக இறங்கிஉள்ளோம். எங்களுடைய முயற்சிகள் சரியான பாதையில் பயணித்தால் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் கிரிக்கெட் இடம்பெறும். 2024-ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்கக் கோரும் மனுவை சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் அளிக்கும் காலக்கெடு முடிந்துவிட்டது. ஆதலால், 2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க தீவிரமாக முயற்சிகள் நடந்து வருகிறது.

எங்களுடைய பேச்சுவார்த்தை சிறப்பாக சென்றால் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெறும் என கூறிஉள்ளார் டேவ் ரிச்சார்ட்சன். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியை இணைக்க முடியாது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் லாஸ் ஏஞ்செல்ஸ் குழுவுடன் நாங்கள் பேசிவருகிறோம், 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும் என நம்புகிறோம் என குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com