ஐ.சி.சி.ஜூன் மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்..? யார்..?

ஜூன் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூன் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

அதன்படி ஜூன் மாத சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் மற்றும் ரபடாவும், இலங்கை வீரரான பதும் நிசங்காவும் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஹேய்லி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), தஸ்மின் பிரிட்ஸ் (தென் ஆப்பிரிக்கா) மற்றும் அபி பிளெட்சர் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com