உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் - ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.
உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் - ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!
Published on

துபாய்,

50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் பங்குபெறும் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள 10 அணிகளை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்கள் தங்களது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை விரைவாக தேர்ந்தெடுப்பார்கள் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com