ஐசிசி-யின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது; பரிந்துரை பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 2 இந்திய வீரர்கள்..!!

ஐசிசி-யின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் 2 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசி-யின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது; பரிந்துரை பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 2 இந்திய வீரர்கள்..!!
Published on

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய வீரர்களான சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் இடம் பெற்றுள்ளனர். மேலும் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான  டேவிட் மாலனும் இடம் பெற்றுள்ளார்.

அதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் தென்னாப்பிரிக்க வீராங்கனைகளான லாரா வோல்வார்ட் மற்றும் நாடின் டி கிளர்க்கும், இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்தும் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com