

புதுடெல்லி,
இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, சமீபத்திய ஐசிசி மகளிர் டி20 சர்வதேச பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆசியக் கோப்பையில் அவரது அபாரமான பந்துவீச்சு இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஆசியக் கோப்பையில் தீப்தி 14 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக 3/19 என்ற சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார்இந்த சிறப்பான செயல்பாட்டின் மூலம் 4 இடங்கள் முன்னேறி நம்பர் 2 இடத்தை அடைந்துள்ளார்.
இந்தியாவின் ஸ்ரீ சரணி முதலிடத்தில் தொடர்கிறார். ஆசியக் கோப்பை இறுதியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய சரணி, போட்டியில் மொத்தம் 12 விக்கெட்டுகளை எடுத்தார் சரணி தற்போது 802 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.