

சென்னை,
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி தென் ஆாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரின் 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ யான்சன் சிறப்பாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் ஸ்டார்க்கை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார்.
தொடர்ந்து கேப் டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் ஸ்டார்க் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் பலனாக அவர் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார். யான்சன் 2-வது இடத்துக்குச் சரிந்தார்.
புதிய தரவரிசையில் நியூசிலாந்தின் மாட் ஹென்றி 861 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்தின் ஒல்லி ராபின்சன் 856 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 853 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் 6-வது இடத்திலும், பாட் கம்மின்ஸ் 9-வது இடத்திலும், ஜோஷ் ஹேசில்வுட் 10-வது இடத்திலும் உள்ளனர். இதன் மூலம் முதல் 10 இடங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் சைமன் ஹார்மர் 9 இடங்கள் முன்னேறி 817 புள்ளிகளுடன் 7-வது இடத்தைப் பிடித்துள்ளார். சக வீரர் ககிசோ ரபாடா 8-வது இடத்தில் உள்ளார்.
முதல் 10 இடங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் 4 பேரும், தென் ஆப்பிரிக்க வீரர்கள் 3 பேரும் இடம்பெற்றுள்ளனர். இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளைச் சேர்ந்த தலா ஒரு வீரரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.