"தோனி விளையாடலேன்னா நானே இழுத்துட்டு வருவேன்" - ஹர்பஜன் சிங்

சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டும்.
"தோனி விளையாடலேன்னா நானே இழுத்துட்டு வருவேன்" - ஹர்பஜன் சிங்
Published on

சென்னை,

நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் இன்று (திங்கட்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்பிரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்தச் சூழலில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும், ரசிகர்களும் உற்று நோக்கும் ஒரே பெயர் எம்.எஸ். தோனி.

நடப்பு சீசனில் தொடக்கத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தோனி இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது.

இந்நிலையில், தோனி மஞ்சள் சீருடையில் மீண்டும் களம் காண்பார் என்ற நம்பிக்கையை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கைவிடவில்லை. தோனியுடன் இணைந்து இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற ஹர்பஜன், தோனி இன்றைய போட்டியில் விளையாட வேண்டும் என கூறினார்.

Also Read
சென்னை ரசிகர்களுக்கு தோனி கொடுத்த வாக்குறுதி... இன்று நிறைவேறப்போகிறதா? - பரபரக்கும் சேப்பாக்கம்
"தோனி விளையாடலேன்னா நானே இழுத்துட்டு வருவேன்" - ஹர்பஜன் சிங்

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், "பாருங்கள், தனது கடைசி ஐபிஎல் போட்டியை சென்னை ரசிகர்களின் முன்னிலையில்தான் விளையாடுவேன் என்று தோனி முன்பே கூறியிருந்தார். அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது. இது இந்த சீசனில் சிஎஸ்கே-வின் கடைசி ஹோம் மேட்ச் என்பதால், தோனி கடைசி முறையாக விளையாடுவதை நாம் பார்க்க அதிக வாய்ப்புள்ளது.

ஒருவேளை அவர் இன்று விளையாடவில்லை என்றால், அடுத்த ஆண்டும் விளையாட வருவார் என்றுதான் அர்த்தம். அவரை உங்களால் கணிக்கவே முடியாது. தோனி தயவுசெய்து விளையாடுங்க, இல்லைன்னா நானே உங்களை மைதானத்துக்குள்ள தரதரவென இழுத்துட்டு வந்துடுவேன்’ என்று ஜாலியாக கூறி உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com