அந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டும் பாகிஸ்தானில் இருந்திருந்தால்.. - பாசித் அலி

ஆசிய கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது துரதிர்ஷ்டவசமானது என்று பாசித் அலி கூறியுள்ளார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

லாகூர்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ரிங்கு சிங், திலக் வர்மா, அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் அந்த அணியில் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால் அந்த அணியில் முன்னணி நட்சத்திரங்களான ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம்பெறவில்லை. இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சிராஜ், ஸ்ரேயாஸ்,ஷமி, ஜெய்ஸ்வால் மட்டும் பாகிஸ்தானில் இருந்திருந்தால் ஏபிரிவில் இடம்பெற்றிருப்பார்கள் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் எங்கள் நாட்டில் இருந்திருந்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ஏபிரிவில் இடம்பெற்றிருப்பார்கள். ஆசிய கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது துரதிர்ஷ்டவசமானது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com