யாராவது தமிழ் தெரியுமா? என கேட்டால்... தோனி ஓபன் டாக்

சர்வதேச தரத்துடன் கூடிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது.
யாராவது தமிழ் தெரியுமா? என கேட்டால்... தோனி ஓபன் டாக்
Published on

மதுரை,

மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் ரூ.325 கோடி செலவில் சர்வதேச தரத்துடன் கூடிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்துக்கு அடுத்து தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இதை இந்திய முன்னாள் கேப்டனும், ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி நேற்று திறந்து வைத்தார். மைதானத்தை பேட்டரி காரில் சுற்றி வந்த தோனி, சிறிது நேரம் கிரிக்கெட்டும் ஆடி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது,

உலகத்தரம் வாய்ந்த வசதி வாய்ப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் மைதானம், எதிர்கால கிரிக்கெட் வீரர்களின் கனவுத் தளமாக விளங்கும் என்று குறிப்பிட்டார். மேலும் என்னுடைய ரசிகர்களுடன் பேச மொழி எனக்கு எப்போதுமே தடையாக இல்லை. யாராவது என்னிடம் தமிழ் தெரியுமா? என கேட்டால், மதியம் சாப்டிங்களா? இரவு சாப்டிங்களா? என கேட்பேன். என தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com