

மும்பை,
ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகமானபோதிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த மகேந்திர சிங் தோனி அந்த அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த மகேந்திர சிங் தோனி, இன்று (நவம்பர் 17) ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும், அடுத்த ஐபிஎல் சீசனில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார்.
இந்தநிலையில், சில அழகான பயணங்கள் தொடங்க வேண்டும் என்றால் சில பயணங்களை முடித்தாக வேண்டும் என சாக்ஷி கூறியுள்ளார்.
"சில அத்தியாயங்கள் முடிவுக்கு வந்தால்தான், அழகான புதிய அத்தியாயங்கள் தொடங்கும். பல ஆண்டுகளாக மஹியை நேசித்து, ஆதரித்து, அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி. உங்களை நேரில் அறிந்திருந்தாலும், அறியாவிட்டாலும் உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகப்பெரியது. நீங்கள் அளித்த அளவற்ற அன்புக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்போம். புதிய தொடக்கங்கள், புதிய பயணங்கள், இன்னும் பல அழகான நினைவுகள் உருவாகட்டும்! மஹி, உங்களை நினைத்து எப்போதும் பெருமைப்படுகிறோம் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.