

சண்டிகார்
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சண்டிகாரில் நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கே.எல். ராகுல் யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார். 165 பந்துகளில் சதம் விளாசினார். 100 ரன்கள் எடுத்தபோது, கேட்ச் கொடுத்து வெளியேறினார். டெஸ்ட் போட்டிகளில் அவருடைய 12-வது சதம் இதுவாகும். ராகுலின் 3-வது தொடர் சதமும் ஆகும்.
இதில் விசேஷம் என்னவென்றால், 3 போட்டிகளிலும் அவர் சரியாக 100 ரன்கள் எடுத்துள்ளார். இதனால், சச்சின் தெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலியின் சாதனையை கே.எல். ராகுல் முறியடித்ததுடன், டெஸ்ட் வரலாற்றிலேயே இந்த சாதனை படைத்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் சச்சின், கங்குலி இருவரும் தொடர்ந்து தலா இரண்டு முறை 100 ரன்களை அடித்துள்ளனர். ஸ்டீவ் வாக் மற்றும் கிரீம் வுட் இருவரும் தலா 3 முறை 100 ரன்கள் அடித்துள்ளனர். ராகுலை விட இங்கிலாந்தின் லியோனார்ட் ஹட்டன் கூடுதலாக ஒரு முறை (4 முறை) சரியாக 100 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆனால், ஒருவரும் ராகுலை போன்று அடுத்தடுத்து 3 முறை 100 ரன்கள் எடுத்தது இல்லை. இதனால், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3 முறை 100 ரன்கள் எடுத்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை ராகுல் படைத்துள்ளார்.