

நியூசண்டிகார்,
கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் திருவனந்தபுரம் மற்றும் கவுகாத்தியில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்தியா எளிதில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.
இதற்கிடையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் நியூசண்டிகாரில் இன்று நடக்கிறது. இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சூப்பர் பார்மில் உள்ள இந்தியா தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்ல முனைப்பு காட்டுகிறது.