

மும்பை,
இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி மூன்று டி20 போட்டிகளிலும் , அதன்பின் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.டி20 போட்டிகள் நவம்பர் 17 அன்று ஜெய்ப்பூரிலும், நவம்பர் 19 அன்று ராஞ்சியிலும், நவம்பர் 21 அன்று கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளன.டெஸ்ட் போட்டிகள் நவம்பர் 25-29 வரை கான்பூரிலும், டிசம்பர் 3-7 வரை மும்பையிலும் நடைபெற உள்ளன.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் டிசம்பர் 3ம் தேதி தொடங்கவுள்ள இந்தியா-நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் மராட்டிய மாநில அரசுக்கு கடிதம் மூலம் விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 100 சதவீத பார்வையாளர்களை வான்கடே மைதானத்துக்குள் அனுமதிக்க மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு மராட்டிய மாநில அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.