நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்: 464 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்தியா ஏ

சிறப்பாக விளையாடி அணிக்கு வலுவான ஸ்கோரைப் பெற்றுத் தந்தனர்.
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்: 464 ரன்களுக்கு டிக்ளேர் செய்த  இந்தியா ஏ
Published on: 

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 146 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 464 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு வலுவான ஸ்கோரைப் பெற்றுத் தந்தனர்.

ஜெய்ஸ்வால்

இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 138 பந்துகளில் 16 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 102 ரன்கள் எடுத்து சதமடித்தார்.

நியூசிலாந்து ஏ அணி

சாய் சுதர்சன் 88 ரன்களும், துருவ் ஜூரெல் 95 பந்துகளில் 71 ரன்களும் சேர்த்தனர். தொடர்ந்து விளையாடிய திலக் வர்மா 164 பந்துகளில் 81 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 107 பந்துகளில் 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தனர்.

இதையடுத்து 465 ரன்கள் இலக்கை நோக்கி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து ஏ அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 12.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 430 ரன்கள் முன்னிலை பெற்றது.

X