

புதுடெல்லி,
இங்கிலாந்து ஏ மகளிர் அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ள இந்தியா ஏ மகளிர் அணியின் வீராங்கனைகள் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.
இந்தியா ஏ, இங்கிலாந்து ஏ அணிகளுக்கு இடையில் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி என மொத்தம் 7 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
இதில், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்தியா ஏ அணிக்கு அனுஷ்கா சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மின்னு மணி துணைக் கேப்டனாக செயல்படுவார். இரு அணிகளிலும் ஜி. கமலினி, ஷிப்ரா கிரி ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணியை மின்னு மணி வழிநடத்த உள்ளார். தேஜல் ஹசப்னிஸ் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விரிந்தா தினேஷ், தனிஷா சிங், சானிகா சால்கே, அனுஷ்கா சர்மா (கேப்டன்), நிகி பிரசாத், ஜி. கமலினி (விக்கெட் கீப்பர்), ஷிப்ரா கிரி (விக்கெட் கீப்பர்), மின்னு மணி (துணைக் கேப்டன்), அமன்ஜோத் கவுர், ஷ்ரேயங்கா பாட்டீல், வைஷ்ணவி சர்மா, பிரேமா ராவத், சைமா தாக்கோர், மோனிகா படேல், காஷ்வி கவுதம்.
விரிந்தா தினேஷ், தனிஷா சிங், பிரியா புனியா, அனுஷ்கா சர்மா (கேப்டன்), நிகி பிரசாத், ஜி. கமலினி (விக்கெட் கீப்பர்), ஷிப்ரா கிரி (விக்கெட் கீப்பர்), மின்னு மணி (துணைக் கேப்டன்), தேஜல் ஹசப்னிஸ், ஷ்ரேயங்கா பாட்டீல், அமிஷா பகுகண்டி, ஷப்னம் ஷகீல், சைமா தாக்கோர், அக்ஷிதா பகத், காஷ்வி கவுதம்.
சுபா சதீஷ், பிரியா புனியா, தனிஷா சிங், பூர்வஜா வெர்லேகர், ஹென்ரியெட்டா பெரேரா, தேஜல் ஹசப்னிஸ் (துணைக் கேப்டன்), ஷிப்ரா கிரி (விக்கெட் கீப்பர்), உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்), மின்னு மணி (கேப்டன்), ஷ்ரேயங்கா பாட்டீல், சைமா தாக்கோர், அக்ஷிதா பகத், அமிஷா பகுகண்டி, ஹேப்பி குமாரி, ஷப்னம் ஷகீல்.
டி20 போட்டிகள் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்திலும், ஒருநாள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்திலும் நடைபெற உள்ளன.
நவம்பர் 30: முதல் போட்டி – பிற்பகல் 1 மணி
டிசம்பர் 3: 2-வது போட்டி – மாலை 6 மணி
டிசம்பர் 5: 3-வது போட்டி – மாலை 6 மணி
டிசம்பர் 8: முதல் போட்டி – காலை 9 மணி
டிசம்பர் 11: 2-வது போட்டி – பிற்பகல் 2 மணி
டிசம்பர் 14: 3-வது போட்டி – பிற்பகல் 2 மணி
டிசம்பர் 19: மும்பையில் காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது.