புதுச்சேரியில் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ கிரிக்கெட் தொடர்!

2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஹர்திக் பாண்டியா
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் முதல்முறையாக இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் பங்கேற்கும் சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

4 நாள் டெஸ்ட் போட்டிகள்

புதுச்சேரி துத்திப்பட்டு பகுதியில் உள்ள சி.ஏ.பி. மைதானத்தில் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

முதல் டெஸ்ட்: செப். 22 முதல் 25 வரை

2-வது டெஸ்ட்: செப். 29 முதல் அக். 2 வரை

3 ஒருநாள் போட்டிகள்

டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளன.

முதல் ஒருநாள்: அக். 6

2-வது ஒருநாள்: அக். 9

3-வது ஒருநாள்: அக். 11

புதுச்சேரியில் முதல்முறையாக நடைபெற உள்ள இந்த சர்வதேச கிரிக்கெட் தொடரை நேரில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆஸ்திரேலியா ஏ தொடருக்கான இந்திய ஏ அணி:

இந்தியா ஏ 4 நாள் டெஸ்ட் அணி:

அமன் மொகடே, ஆயுஷ் பாண்டே, தேவ்தத் படிக்கல் , சாய் சுதர்சன் , யாஷ் ரத்தோட், ஷேக் ரஷீத், குமார் குஷாக்ரா , ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், துஷார் தேஷ்பாண்டே, அன்ஷுல் கம்போஜ், பிரபுல் ஹின்ச், நாராயன் ஜெகதீசன், நாச்சிகேத் பூடே, வி. வைஷாக்*

இந்தியா ஏ ஒரு நாள் அணி:

பிரியான்ஷ் ஆர்யா, சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல் , ருதுராஜ் கெய்க்வாட் , ரஜத் படிதார், குமார் குஷாக்ரா , நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகாம், அர்ஷின் குல்கர்னி, அர்ஷத் கான், நமன் திர், ஹர்திக் பாண்டியா*, குர்ஜப்னீத் சிங், யாஷ் தாக்கூர்

X

Daily Thanthi
www.dailythanthi.com