இந்திய 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 424 ரன் குவிப்பு

இந்தியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ்குமார் 5 விக்கெட்டும், முகமது சிராஜ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்திய 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 424 ரன் குவிப்பு
Published on: 

கிறிஸ்ட்சர்ச்,

இந்தியா 'ஏ'-நியூசிலாந்து 'ஏ' அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய 'ஏ' அணி 346 ரன்கள் எடுத்தது. பின் னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 'ஏ' அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்திருந்தது.

நியூசிலாந்து

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய மேத்யூ பாய்லே 110 ரன்னிலும், டீன் பாக்ஸ்கிராப்ட் 93 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து ஏ அணி 132.5 ஓவர்களில் 424 ரன் குவித்து ஆல்-அவுட் ஆனது. 338 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து இருந்த அந்த அணி கடைசி 2 விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்ததால் முன்னிலை பெற்றது. இந்தியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ்குமார் 5 விக்கெட்டும், முகமது சிராஜ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

78 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய 'ஏ' அணி ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 20 ரன்னுடனும், சாய் சுதர்சன் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

X