இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு

இந்திய அணி 49 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது.
 இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு
Published on

கொழும்பு,

இலங்கை ஏ. இந்தியா ஏ. ஆப்கானிஸ்தான் ஏ ஆகிய 3 அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் இந்தியா ஏ ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இம்ரான் மிர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.மழை காரணமாக ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது. இதனால் இந்திய அணி 49 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பிரப்சிம்ரன் சிங் 84 ரன்களும், ருதுராஜ். திலக் வர்மா தலா 66 ரன்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணியில் அப்துல்லா அமத்ஷாய் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. ஆப்கானிஸ்தான் அணி 25.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com