டெஸ்டில் இந்தியாவும், நியூசிலாந்தும் சமமான நிலையில் உள்ளன - பிலிப்ஸ் கூறுகிறார்

3ம் நாள் முடிவில் இந்திய அணி 486 ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்டில் இந்தியாவும், நியூசிலாந்தும் சமமான நிலையில் உள்ளன - பிலிப்ஸ் கூறுகிறார்
Published on: 

வெலிங்டன்,

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. 3ம் நாள் முடிவில் இந்திய அணி 486 ரன்கள் எடுத்துள்ளது. அத்துடன், 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், டெஸ்ட் தொடர் குறித்து கிளென் பிலிப்ஸ் கூறியதாவது;

'இந்த டெஸ்டில் இரு அணிகளும் சமமான நிலையில் தான் உள்ளது. இந்தியா புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்தியது. இருப்பினும் நாங்கள் 368 ரன்கள் எடுத்துள்ளோம். இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆடுகளத்தின் தன்மை மெதுவானதாக மாறி வருகிறது. ஆட்டம் போகப்போக நான், ரச்சின் ரவீந்திரா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்போம்.

பேசின் ரிசர்வ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற பெயரை பெற்றுள்ளது. ஆனால் நான் இந்த மைதானத்தில் நடந்த பிளங்கெட் ஷீல்டு போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறேன். பந்தில் சுழற்சியை ஏற்படுத்தினால், பவுன்ஸ் கிடைப்பதை பார்த்து இருக்கிறோம். அதுபோல் நடக்கும் என்று நம்பலாம்' என்றார்.

X