

சென்னை,
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அபார வெற்றியுடன் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. கடைசி சூப்பர்-8 போட்டியில், 196 ரன்கள் இலக்கை இந்திய அணி 19.2 ஓவர்களில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு முன் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன.
இதன் மூலம் டி20 உலகக்கோப்பையில் அதிகமுறை(6) அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணிகளின் பட்டியலில் இந்தியா இணைந்ததுள்ளது. பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளும் 6 முறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன.
மார்ச் 4 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் தென் ஆப்பிரிக்காவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. மார்ச் 5 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதுகின்றன. இறுதிப் போட்டி மார்ச் 8 அன்று நடைபெறும்.