

துபாய்,
மகளிர் ஆசியக் கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, சமீபத்திய மோதல்களில் இந்திய அணி பாகிஸ்தானை விட “எப்போதும் ஒரு படி முன்னிலையில்” இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தாய்லாந்து மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு வலுவாக இருப்பதை ஒப்புக்கொண்ட தீப்தி, “அவர்களின் பலத்தைப் பற்றி கவலைப்படுவதைவிட, எங்களுடைய பலத்தில் கவனம் செலுத்துகிறோம். நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதே எங்கள் நோக்கம்” என்று கூறினார்.
இரு அணிகளின் சமீபத்திய சாதனையும் இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. இந்தியா 17 ஆட்டங்களில் 14 வெற்றிகளைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் 3 முறை மட்டுமே வென்றுள்ளது.