

புது டெல்லி,
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இந்திய அணியில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை நிறைவு செய்துள்ள இந்திய அணி, அடுத்ததாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் முதற்கட்டமாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி களமிறங்க உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து பிசிசிஐ மருத்துவக் குழு நடத்திய பரிசோதனையில், அவர் முழுமையாக குணமடைய குறைந்தபட்சம் 4 வாரங்கள் ஓய்வு தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நிதிஷ் குமார் ரெட்டி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஜெட்ஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.