இந்தியா-நியூசிலாந்து கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்

இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா-நியூசிலாந்து கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்
Published on: 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இந்தியா

இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி யில் ஈடுபட்டுள்ளனர்.

தொடக்க டெஸ்டில் முதல் நாளில் மட்டும் பந்து வீச்சு ஓரளவு எடுபட்டது. அதன் பிறகு 3-வது நாளில் இருந்து ஆடு களம் மிகவும் மந்தமாகி, பவுன்சே இல்லாமல் பேட்டிங்குக்கு அனுகூலமாக மாறியது. இந்தியா முதல் இன்னிங்சில் 720 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. வெளிநாட்டில் இந்தியாவின் மெகா ஸ்கோர் இதுவாகும். ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல் சதம் விளாசி அசத்தினர். கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல் அரைசதம் அடித்தனர்.

352 ரன் பின்தங்கிய நியூசிலாந்து கடைசி நாளில் போராடி 'டிரா' செய்தது. டேரில் மிட்செல்லும், கிளென் பிலிப்சும் 43 ஓவர்கள் சமாளித்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினர். இந்த டெஸ்டில் மொத்தம் 407 ஓவர்கள் வீசப் பட்ட போதிலும் 24 விக்கெட் மட்டுமே வீழ்த்தப்பட்டன. இதனால் பவுலர்கள் சோர்ந்து போனார்கள்.

ஆனால் கிறைஸ்ட்சர்ச் ஆடுகளத்தில் ஓரளவு பவுன்ஸ் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பந்து வீச்சாளர் கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆட்டத்தில் முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை தொடக்க டெஸ்டில் ஹென்றி நிகோல்ஸ், டிவான் கான்வே. டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். கேப்டன் டாம் லாதம் இரு இன்னிங்சிலும் பும்ராவின் பந்து வீச்சில் டக்-அவுட் ஆனார். இதே போல் பவுலர்களும் சொதப்பினர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டப்பி 33 ஓவர்களில் 201 ரன்களை வாரி வழங்கி மோசமான பவுலர் பட்டியலில் இணைந்தார். எனவே தவறுகளை திருத்திக் கொண்டு வலுவாக மீண்டு வர வரிந்து கட்டுவார்கள்.

X