இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ் குமாரின் தந்தை மரணம்

இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாரின் தந்தை புற்று நோய் பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ் குமாரின் தந்தை மரணம்
Published on

மீரட்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்குமாரின் தந்தை கிரண் பால் சிங் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். கிரண் பால் சிங் உத்தரப்பிரதேச காவல்துறையில் பணியாற்றியவர். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த கிரண் பால் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை எடுத்து வந்த கிரண் பால் சிங், உடல் நிலை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மோசமானது. இதையடுத்து மீரட்டில் உள்ள மருத்துவமனையில் கிரண் பால் சிங் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் கிரண் பால் சிங் உயிரிழந்தார். புவனேஷ்குமாரின் தந்தை மறைவுக்கு சக வீரர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com