ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு
Published on

மும்பை,

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, 3 டி20 போட்டிகளும் முறையே வரும் 13,15,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இப்போட்டிகள் அனைத்தும் டெல்லியில் நடைபெற உள்ளன.

இந்திய அணி அறிவிப்பு

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வீரர்கள் விவரம்

ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (கீப்பர்), இஷான் கிஷன் (கீப்பர்) , திலக் வர்மா (துணை கேப்டன்), ஷிவம் துபே, நிதிஷ் குமார், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷோனி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா

X

Daily Thanthi
www.dailythanthi.com