

தர்மசாலா,
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி கடந்த 6ம் தேதி தொடங்கியது. டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.